ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

November 14, 2023

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதி மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல தனுஷ்கோடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது […]

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி என இரண்டு கடல் பகுதிகள் உள்ளன. இதில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதி மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல தனுஷ்கோடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மன்னர் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்துள்ளது. இதே போல மன்னர் வளைகுடா பகுதியில் மீன் பிடிக்க செல்லும் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu