ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர். இதையடுத்து இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த […]

இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

இதையடுத்து இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர். அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர். இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu