இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வரும் அதிபர் தேர்தலில் சுயேசையாக போட்டியிட இருக்கிறார்.
இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே ஐக்கிய ஜனநாயக கட்சி தலைவர் ஆவார். இது குறித்து ஐக்கிய ஜனநாயகக் கட்சி தலைவர் துணைத்தலைவர் ரூவான் விஜய் வர்த்தன கூறுகையில, விரைவில் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் தலைவராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். அவர் அதனை தனது நடவடிக்கைகள் மூலம் நிரூபித்துள்ளார். அவர் வரும் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறியுள்ளார். இதற்கிடையே இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.