தெலுங்கானாவில் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும் இந்நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தெலுங்கானாவில் தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேர்தலின் போது மக்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்ல இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் வாக்களிப்பை அதிகரிப்பதற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க மையங்களுக்கு செல்வதற்காகவும் இந்த சேவையை வழங்க உள்ளதாக அதன் இணை நிறுவனர் பவன் குண்டுபலி தெரிவித்துள்ளார்.