வரும் ஜூன் மூன்றாம் தேதி அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அன்றைய தினத்தில், புதன், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் நேர்கோட்டில் வருகின்றன. ஒரே நேரத்தில் அனைத்து கோள்களையும் நேர்கோட்டில் காண்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
சூரியனைச் சுற்றி சூரிய மண்டலத்தில் உள்ள 9 கோள்களும் சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் அதன் தனிப்பட்ட சுற்றுவட்ட பாதையில் இருக்கும் போது, அரிதினும் அரிதாக, ஒரே நேரத்தில் பூமியிலிருந்து பார்க்கும் படி தெரியும். அந்த வகையில், ஜூன் 3ம் தேதி அனைத்து கோள்களையும் நேர்கோட்டில் காணக்கூடிய அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அதாவது, விண்வெளியில் உள்ள கோள்கள் ஒரே நேர்கோட்டில் இல்லை. ஆனால், பூமியில் இருந்து பார்க்கும்போது நேர்கோட்டில் தெரியும் படி காட்சியளிக்கிறது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 8ம் தேதி கோள்களின் அணிவகுப்பு தெரிந்தது.