இமயமலையில் அரிதாக தென்பட்ட ராட்சத வண்ண மின்னல்கள்

அரிதினும் அரிதான அறிவியல் நிகழ்வாக, ராட்சத வண்ண மின்னல்கள் இமயமலை பகுதியில் தென்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை வெளியிட்ட நாசா, இதை இந்த வாரத்தின் சிறந்த புகைப்படமாக குறிப்பிட்டுள்ளது. சீனா மற்றும் பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைத் தொடர் பகுதியில், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் மின்னல்கள் தென்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தென்பட்ட இந்த ஒளித்திரள், அதிநவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ‘இடியுடன் கூடிய மின்னல் ஏற்படும் போது, பூமியின் அயனி மண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய […]

அரிதினும் அரிதான அறிவியல் நிகழ்வாக, ராட்சத வண்ண மின்னல்கள் இமயமலை பகுதியில் தென்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை வெளியிட்ட நாசா, இதை இந்த வாரத்தின் சிறந்த புகைப்படமாக குறிப்பிட்டுள்ளது.

சீனா மற்றும் பூட்டான் நாடுகளை ஒட்டிய இமயமலைத் தொடர் பகுதியில், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் மின்னல்கள் தென்பட்டுள்ளன. இரவு நேரத்தில் தென்பட்ட இந்த ஒளித்திரள், அதிநவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ‘இடியுடன் கூடிய மின்னல் ஏற்படும் போது, பூமியின் அயனி மண்டல அடுக்குகளில் ஏற்படும் சூரிய கதிர்வீச்சுகள் மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சுகள் வண்ண மின்னல்களை ஏற்படுத்துகின்றன’ என்று நாசா விஞ்ஞானிகள் இது பற்றி விளக்கம் அளித்துள்ளனர். மேலும், 21 ஆம் நூற்றாண்டில் மட்டுமே இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu