ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்கள் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்புகளை தொடர தடை விதிக்கப்பட்டது.
இதற்கு ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வீரர்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: "இஸ்லாமிய போதனைகள் ஆண்களும் பெண்களும் சமமாக அறிவைப் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டு, அது பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறிப்பாக மருத்துவத் துறையில் மிகவும் கவலைக்குரியது. ஏனெனில் பெண்களுக்கான மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பெண்களின் உடல்நலனை பாதிக்கின்றது. எனவே, இந்த முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளனர்.














