ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்டிரிய லோக் தளம் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் 11 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியை தற்போது ஜெயன் சவுத்ரி வழிநடத்தி வருகிறார். இவர் சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் மாநிலங்களவையில் எம்.பி ஆக உள்ளார். மேலும் ராஷ்ட்ரிய லோக் தளம் சமாஜ்வாதி கட்சிகள் மக்களவையில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயின் சவுத்ரின் ராஷ்டிரிய லோக் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.














