எலி மருந்து விஷம் காரணமாக 2 குழந்தைகள் உயிரிழந்தது. எனவே பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்திற்கு வழக்கு, உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த கிரிதரன் மற்றும் அவரது குடும்பம், வீட்டில் எலி தொல்லையினால் கையாள்வதற்காக எலி மருந்துகளை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். அதனால், வீட்டில் பரவிய எலி மருந்தின் வாயு மூச்சுத்திணறல் உண்டாக்கி, 6 மற்றும் 4 வயது குழந்தைகள் உயிரிழந்தனர்.இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட கிரிதரன் மற்றும் அவரது மனைவி பவித்ரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், எலி மருந்துகள் விஷம் பரப்பியதாகக் கூறி, சிட்டம்பலம் பகுதியிலுள்ள பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, இந்நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.














