ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனம் பொது பங்கிட்டுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்போது புதிதாக 1816 கோடி ரூபாய் பங்குகள் வெளியிடப்பட உள்ளன. அதே வேளையில், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் 54.39 மில்லியன் பங்குகளை விற்க உள்ளனர். இதன் பகுதியாக, ரத்தன் டாடா ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தில் தனக்கு இருக்கும் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரத்தன் டாடாவிடம் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் 0.02% பங்குகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு 66 லட்சம் ஆகும். இந்த நிலையில், 77900 ஃபர்ஸ்ட் க்ரை பங்குகளை ரத்தன் டாடா விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சராசரியாக, ஒரு பங்கு 84.72 ரூபாய்க்கு விற்கப்படும் என கருதப்படுகிறது. ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முன், ரத்தன் டாடா போலவே, மஹிந்திரா, டி பி ஜி குரோத், நியூ குவஸ்ட் ஏசியா போன்ற முன்னணி முதலீட்டாளர்களும் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.














