பிசிசிஐ வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை ரவி சாஸ்திரிக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இது 2019 ஆம் ஆண்டு கொரோனாவிற்கு பின்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடத்தப்பட்டது .இதில் பிசிசியின் சிறந்த விரான சீ.கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினை முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் 1981 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர். அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி வெளியேறியது. இதனை அடுத்து தலைமை பயிற்சியில் இருந்து விலகிய அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.