உலக மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தியுள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் 597வது நிர்வாக குழு இயக்குனர்களின் கூட்டம் நேற்று அதன் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலக மற்றும் உள்நாட்டு சவால்கள், புவிசார் அரசியல் பிரச்சினைகள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரிசர்வ் வங்கியின் அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம் வரும் செப்டம்பர் 28 - 30 தேதிகளில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.