மத்திய அரசுக்கு, கடந்த 2024 ஆம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் தொகையை 2.11 லட்சம் கோடியாக வழங்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட டிவிடெண்ட் தொகைகளிலேயே இதுதான் உயர்வான தொகை ஆகும்.
கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், மத்திய அரசுக்கு 87416 கோடி ரூபாய் டிவிடெண்ட் ஆக வழங்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் நிதி ஆண்டில் 140% உயர்வாக, 2.1 லட்சம் கோடி அளவில் டிவிடெண்ட் வழங்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதால் டிவிடெண்ட் தொகையை உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று, மும்பையில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு சந்திப்பின் முடிவில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.