இன்டஸ் இன்ட் வங்கியின் 9.5% பங்குகளை எச்டிஎப்சி வங்கி வாங்குவதற்கு ஆர்பிஐ ஒப்புதல்

February 6, 2024

இன்டஸ் இன்ட் வங்கியின் 9.5% பங்குகளை எச்டிஎப்சி வங்கி கையகப்படுத்த உள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விதிமுறைகள் படி, ஹெச்டிஎஃப்சி வங்கி பிப்ரவரி 5, 2024 முதல் அடுத்த ஒரு வருடத்திற்குள் இன்டஸ் இன்ட் வங்கியின் பங்குகளை கையகப்படுத்த வேண்டும். ஒருவேளை கையகப்படுத்தல் நிகழாவிட்டால், […]

இன்டஸ் இன்ட் வங்கியின் 9.5% பங்குகளை எச்டிஎப்சி வங்கி கையகப்படுத்த உள்ளது. இதற்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் படி இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விதிமுறைகள் படி, ஹெச்டிஎஃப்சி வங்கி பிப்ரவரி 5, 2024 முதல் அடுத்த ஒரு வருடத்திற்குள் இன்டஸ் இன்ட் வங்கியின் பங்குகளை கையகப்படுத்த வேண்டும். ஒருவேளை கையகப்படுத்தல் நிகழாவிட்டால், ஒப்புதல் ரத்து செய்யப்படும். மேலும், 9.5% அளவுக்கு உட்பட்டு மட்டுமே கையகப்படுத்தல் நிகழ வேண்டும். இதுவே 5% அளவுக்கு கீழ் இருந்தால், அதனை மேலும் அதிகரிக்க, மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அணுகப்பட வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu