பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் ஈ.காம் மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு டிஜிட்டல் கடன் உதவி சேவைகளை தொடர ஆர்பிஐ தடை விதித்துள்ளது.பஜாஜ் பின்சர்வ் நிறுவனமானது தனி நபர் கடன் மற்றும் வர்த்தக கடன் வழங்குவதில் முன்னணி வகித்து வருகிறது. மேலும் இது நிதி வர்த்தகத்தில் புதுமையாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐ இந்நிறுவனம் ஈ.காம் மற்றும் இன்ஸ்டா இ.எம்.ஐ கார்டு என்னும் பெயரில் வழங்கி வரும் டிஜிட்டல் கடன் உதவி சேவைகளை தொடர தடை விதித்துள்ளது.ஒவ்வொரு கடன் நிறுவனமும் கடன் பெறுபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கடனை வசூலிக்கும் முறை மற்றும் விகிதங்கள் குறித்த தகவல்கள் வெளியிட வேண்டும். இது குறித்த தகவல் அடங்கிய விவர பட்டியல் "முக்கிய தகவல்களுக்கான குறிப்பு" என்றும் "கி ஃபேக்ட் ஸ்டேட்மென்ட்" என்றும் அழைக்கப்படும். இதன் மூலம் கடன் பெறுவோர் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும். பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் இந்த விதிமுறைகளை மீறி உள்ளதாகவும், கடன் பெறுவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் முறையாக இல்லை எனவும் கூறி அந்த நிறுவனத்திற்கு டிஜிட்டல் முறையில் கடன் வழங்க ஆர்பிஐ தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குறைகளை பஜாஜ் பின்சேர்வ் சரி செய்த பின் இது குறித்து அனுமதி அளிப்பது தொடர்பான பரிசீலனை செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.