இன்று முதல், சோதனை முறையில் புதிய டிஜிட்டல் நாணயம் அறிமுகம் - ஆர்பிஐ

November 1, 2022

நாடு தழுவிய முறையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் மொத்த பரிவர்த்தனைகளுக்கு இந்த டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடு சோதனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்க தரப்பில் உள்ள இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் […]

நாடு தழுவிய முறையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் மொத்த பரிவர்த்தனைகளுக்கு இந்த டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடு சோதனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசாங்க தரப்பில் உள்ள இரண்டாம் நிலை பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, எஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் ஹெச்எஸ்பிசி ஆகிய வங்கிகள் இந்த முதல் கட்ட டிஜிட்டல் நாணய சோதனையில் ஈடுபடுத்தப்படுவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை மூலம், வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை சந்தை சிறப்பாக செயல்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, பரிவர்த்தனை செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், செட்டில்மெண்ட் தரப்பில் இருக்கும் கட்டமைப்பு சிக்கல்கள் களையப்படும் என கூறப்படுகிறது. மேலும், எல்லைகள் தாண்டிய பரப்பரிவர்த்தனைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகிறது.

தற்போது, மொத்த பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. வரும் மாதத்திற்குள், சில்லறை பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு குறித்த சோதனை செய்யப்படும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்தி அரசு வெளியிடும் பத்திரங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu