மத்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக, இந்தியாவின் 9 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. மேலும், இந்த அபராதங்கள் ஒழுங்கு முறைகளை மீறியதால் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது என்றும், வங்கியின் செயல்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி, கேந்திரபாரா நகர்ப்புற கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு முறையே 3.10 லட்சம் மற்றும் 50000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தின் ரேணுகா நகரிக் சககாரி வங்கி ஆகியவற்றுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதைக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மற்றும் கிருஷ்ணா மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு முறையே ஒரு லட்சம் மற்றும் 50000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் சந்த்ராம்பூர் கூட்டுறவு வங்கிக்கு இரண்டு லட்சம் ரூபாயம், நவாநகர் கூட்டுறவு வங்கிக்கு 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் ஜனதா சககாரி வங்கிக்கு 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.