ஜோரோஸ்ட்ரியன் கூட்டுறவு வங்கிக்கு 1.25 கோடி ரூபாய் அபராதம் - மத்திய ரிசர்வ் வங்கி

November 29, 2022

ஜோரோஸ்ட்ரியன் கூட்டுறவு வங்கி மீது 1.25 கோடி அபராதத்தை மத்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. கட்டணச் சலுகை உள்ளிட்ட வங்கி செயல்பாடுகளில், இந்த வங்கி விதிகளை மீறியும், முறையான ஒழுங்கு முறைகளை பின்பற்றவில்லை என்பதாலும், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 வருட கால பதிவேடுகளை முறையாக சேமிக்க தவறியதாகவும் வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோரோஸ்ட்ரியன் கூட்டுறவு வங்கியுடன் சேர்த்து, ஆறு கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக, இந்தியன் […]

ஜோரோஸ்ட்ரியன் கூட்டுறவு வங்கி மீது 1.25 கோடி அபராதத்தை மத்திய ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. கட்டணச் சலுகை உள்ளிட்ட வங்கி செயல்பாடுகளில், இந்த வங்கி விதிகளை மீறியும், முறையான ஒழுங்கு முறைகளை பின்பற்றவில்லை என்பதாலும், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 வருட கால பதிவேடுகளை முறையாக சேமிக்க தவறியதாகவும் வங்கி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜோரோஸ்ட்ரியன் கூட்டுறவு வங்கியுடன் சேர்த்து, ஆறு கூட்டுறவு வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக, இந்தியன் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அபராதங்கள் வங்கிகளின் செயல்பாடுகளை முடக்காது எனவும், வாடிக்கையாளர்கள் சேவைகள் எந்தவகையிலும் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu