ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே 6.5% தொடரும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான நிதி கொள்கை குழுவின் சந்திப்பு நிகழும். அதன்படி, இன்று நடைபெற்ற சந்திப்புக்கு பிறகு வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பணவீக்க விகிதம் 4% அளவை ஒட்டியே நிலவி வருவதால் வட்டி விகிதத்தை மாற்றவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம் தொடர் வளர்ச்சியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டிகளில் எந்த மாற்றங்களும் இருக்காது.