மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி தொடரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், 6.5% ரெப்போ வட்டி விகிதம் நடைமுறையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, இதே சதவீதத்தில் ரெப்போ வட்டி விகிதம் நீடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து 5 வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களின் வட்டி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் இருக்காது. மேலும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தியாவின் நடப்பு நிதி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7% அளவில் இருக்கலாம் என கணிப்பதாக கூறியுள்ளார்.