2024 ஆம் நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு 6.4% - மத்திய ரிசர்வ் வங்கி

February 8, 2023

மத்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கமிட்டியின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் மாத சந்திப்பின் போது, இந்தியாவின் 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.8% ஆகவும், 2024 ஆம் […]

மத்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கமிட்டியின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ், 2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2022 டிசம்பர் மாத சந்திப்பின் போது, இந்தியாவின் 2023 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 6.8% ஆகவும், 2024 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.1% ஆகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த கணிப்பில் சற்று சரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியா, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என்று சக்திகாந்ததாஸ் உறுதியளித்துள்ளார்.

நாணயக் கொள்கை கமிட்டியின் 2024 ஆம் ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பு விகிதம் வருமாறு: முதலாம் காலாண்டு 7.8%, இரண்டாம் காலாண்டு 6.2%, மூன்றாம் காலாண்டு 6% மற்றும் நான்காம் காலாண்டு 5.8%.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu