நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டு மொத்த ஜிடிபி வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இன்று நடைபெற்ற சந்திப்பில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இதனை தெரிவித்தார். மேலும், 2024 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 7.8% ஆக ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என கூறியுள்ளார். தொடர்ந்து, இரண்டாம் காலாண்டில் 6.2% ஆகவும், மூன்றாம் காலாண்டில் 6.1% ஆகவும், நான்காம் காலாண்டில் 5.9% ஆகவும் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3% ஆக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. முன்னதாக கணிக்கப்பட்ட 6.6% அளவில் இருந்து, 6.3% ஆக வளர்ச்சியைக் குறைத்து உலக வங்கி அறிவித்திருந்தது. அதே வேளையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் கூறியுள்ளது.














