ரெப்போ வட்டி விகிதம் 6.25% ; ஜிடிபி கணிப்பு 6.8% - மத்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

December 7, 2022

மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 6.25% ஆக அறிவித்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, மத்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு சந்திப்பு நடைபெற்றது. இறுதி நாளான இன்று, இந்த அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ளார். மேலும், நிலையான வைப்பு நிதிக்கான விகிதம் 6 முதல் 6.5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நடப்பு நிதி […]

மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி, 6.25% ஆக அறிவித்துள்ளது. டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, மத்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு சந்திப்பு நடைபெற்றது. இறுதி நாளான இன்று, இந்த அறிவிப்பை மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ளார்.

மேலும், நிலையான வைப்பு நிதிக்கான விகிதம் 6 முதல் 6.5% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நடப்பு நிதி ஆண்டின் பணவீக்க கணிப்பு, மாற்றம் ஏதுமின்றி, 6.7 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8% ஆக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இது 7% ஆக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியா தொடர்ந்து உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருக்கும் என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu