2000 ரூபாய் திரும்ப பெறப்பட்டதால், நகை, இடம் விற்பனை உயரும் - அறிக்கை

வெள்ளிக்கிழமை அன்று, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் 2000 ரூபாயை வைப்பு அல்லது மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை விரைவாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், அதிக தொகை உள்ள, விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். குறிப்பாக, நிலம் அல்லது இடம் வாங்குவது, நகைகள் வாங்குவது, குளிர்சாதன பெட்டி, […]

வெள்ளிக்கிழமை அன்று, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் 2000 ரூபாயை வைப்பு அல்லது மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. எனவே, தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை விரைவாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில், அதிக தொகை உள்ள, விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். குறிப்பாக, நிலம் அல்லது இடம் வாங்குவது, நகைகள் வாங்குவது, குளிர்சாதன பெட்டி, ஏசி போன்ற மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது ஆகியவற்றில் ஈடுபட துவங்கி உள்ளனர்.

இந்த நிலை குறித்து பொருளாதார வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். அதன்படி, 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்களின் இந்த வாங்கும் நடவடிக்கை உதவி செய்யும்' என்று கூறியுள்ளனர். மேலும், இந்த வார இறுதியில், நகை வாங்குவதில் அதிக மக்கள் ஆர்வம் காட்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், நகைகளை தாமதமாக நிறைவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu