மின்சார உயிர் இழப்புகளை தடுக்க ஆர்சிடி கருவி பொருத்த வேண்டும் என மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.
வீடு, கடை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் நுகர்வோர்கள் ஆர்சிடி கருவி பொருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மின்கசிவினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஆர்.சி.டி எனப்படும், ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் என்ற உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவதை கட்டாயமாக்கியுள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி (RCD) சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.