மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், மின்வாரியம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இதையடுத்து, ஜன.3-ம் தேதி தொழிலாளர் துறை முன்னிலையில் தொழிற்சங்கத்தினர், மின்வாரிய நிர்வாகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இது தொடர்பாகத் தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ``கடந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு தொடர்பாக ஒரு முன்மொழிவு கூட எடுத்து வரவில்லை. அரசு ஒப்புதல் அளிக்கக் காத்திருக்கிறோம் என்று கூறினர். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றனர்.














