நாட்டில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மிகவும் குறைந்து காணப்பட்டது. மேலும் அமெரிக்கா ஏற்றுமதியும் பண வீக்கம் காரணமாக பின்னடவை சந்தித்திருந்த நிலையில் இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூபாய் 11 ஆயிரத்து 628 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 12,248 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11 ஆயிரத்து 917 கோடிக்கு இருந்த நிலையில் இந்த ஆண்டு 12,224 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.