இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் - சீனா 

December 26, 2022

இரு தரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்துள்ளது. லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டில் சீன ராணுவம் அத்துமீறியதில் இரு தரப்பிலும் பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு நாட்டு படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் தவாங் செக்டரில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இந்த மோதலிலும் […]

இரு தரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்துள்ளது.

லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டில் சீன ராணுவம் அத்துமீறியதில் இரு தரப்பிலும் பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு நாட்டு படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் தவாங் செக்டரில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இந்த மோதலிலும் இரு தரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் லடாக்கில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறுகையில், இந்தியாவும், சீனாவும் ராணுவம் மற்றும் தூதரகங்கள் வழியாக தொடர்பை வைத்திருக்கின்றன. சீனா-இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu