ரியல் எஸ்டேட் முதலீடுகள் 32% உயர்வு

January 25, 2023

கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலீடுகள், வருடாந்திர அடிப்படையில் 32% உயர்ந்து, 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், காலாண்டு அடிப்படையில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ரியலி ஸ்டேட் முதலீடுகள் 64% உயர்ந்து, 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 57% இந்திய ரியல் எஸ்டேட் சந்தையை ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, கனடா நாட்டை […]

கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் ரியல் எஸ்டேட் முதலீடுகள், வருடாந்திர அடிப்படையில் 32% உயர்ந்து, 7.8 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், காலாண்டு அடிப்படையில், கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், ரியலி ஸ்டேட் முதலீடுகள் 64% உயர்ந்து, 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 57% இந்திய ரியல் எஸ்டேட் சந்தையை ஆக்கிரமித்துள்ளனர். அதிலும் குறிப்பாக, கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 37% மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 15% முதலீடு செய்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் 40% ஆக்கிரமித்துள்ளனர்.

அறிக்கையின் படி, டெல்லி என்சிஆர் மற்றும் மும்பை நகரங்களில் அதிகப்படியான ரியல் எஸ்டேட் முதலீடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, மொத்த ரியல் எஸ்டேட் முதலீடுகளில் 56% இந்த இரு நகரங்களில் ஏற்பட்டுள்ளது. நிலம் மற்றும் இதர வகையிலான முதலீடுகள் 48% மற்றும் அலுவலக கட்டுமானங்கள் குறித்த முதலீடுகள் 35% பதிவாகியுள்ளது. மேலும், கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் 44% வீடுகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இனிவரும் நாட்களிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் ஸ்திரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu