பயனர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில், புதிய மேம்படுத்தல் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிட உள்ளது. குறிப்பாக, 60 வினாடிகளுக்கு வீடியோ மெசேஜ்களை பதிவு செய்து பகிரும் அம்சம் வெளியிடப்பட உள்ளது. வாட்ஸ் அப் புதிய மேம்படுத்தல்களை வெளியிடும் WABetaInfo, இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆடியோக்களை பதிவு செய்து பகிரும் அம்சம் வாட்ஸ் அப்பில் உள்ளது. அதைப்போலவே, வீடியோக்களை பதிவு செய்யும் அம்சமும் கொண்டுவரப்படுகிறது. ஆடியோக்களை பதிவு செய்வதற்கு மைக் போன்ற பொத்தான் இடம்பெற்றுள்ளது. அது, வீடியோ கேமரா போல மாற்றம் அடைந்தால், அதன் மூலம் வீடியோக்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் புதிய வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.