மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கீழ்நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நிலைபெற உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் வரும் நாட்களில் கனமழை முதல் இடியுடன் கூட கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக கோவாவில் பள்ளிகளுக்கும், கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.