கனமழை காரணமாக சபரி மலைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு - மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் வடகிழக்கு பருவ மழையும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. மேலும் அங்கு கடந்து சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பத்தினம்பட்டா மாவட்டம் முழுவதற்கும் வானிலை ஆய்வு மையம் ரெட்டி அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் அங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வந்து செல்கின்றனர். தற்போது கனமழை பெய்து வருவதால் அங்கு பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றது.