மனிதநேய சேவைகளை தொடர்வதற்காக ஆட்குறைப்பு - ரெட் கிராசில் 1500 பேர் நீக்கம்

April 6, 2023

அடுத்த ஓராண்டுக்குள் கிட்டத்தட்ட 1500 பேர் வரை நீக்கப்படலாம் என்று ரெட் கிராஸ் அமைப்பின் சர்வதேச கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், தனது செயல்பாடுகள் சிலவற்றைக் குறைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் சேமிக்கப்படும் பணம், மனிதநேய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், ரெட் கிராஸ் அமைப்பும் பணி நீக்க நடவடிக்கையில் இணைந்துள்ளது. ஆட்குறைப்புடன் சேர்த்து, தனது அலுவலகங்கள் சிலவற்றை மூட உள்ளதாகவும் […]

அடுத்த ஓராண்டுக்குள் கிட்டத்தட்ட 1500 பேர் வரை நீக்கப்படலாம் என்று ரெட் கிராஸ் அமைப்பின் சர்வதேச கமிட்டி தெரிவித்துள்ளது. மேலும், தனது செயல்பாடுகள் சிலவற்றைக் குறைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் சேமிக்கப்படும் பணம், மனிதநேய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

செலவுகளை குறைக்கும் விதமாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வரும் நிலையில், ரெட் கிராஸ் அமைப்பும் பணி நீக்க நடவடிக்கையில் இணைந்துள்ளது. ஆட்குறைப்புடன் சேர்த்து, தனது அலுவலகங்கள் சிலவற்றை மூட உள்ளதாகவும் கூறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 350 அலுவலகங்களில், 20 அலுவலகங்கள் மூடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. எந்த இடையூறும் இன்றி, மனிதநேய சேவைகளை தொடர்ந்து செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரெட் கிராஸ் தெளிவுபடுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu