சென்னையில் சில இடங்களில் ஊதா நிற ஆவின் பால் பாக்கெட் அளவு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் மாதவரம், கொடுங்கையூர், மூலக்கடை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட பாலில் அளவு குறைவாக இருப்பதை பால் முகவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் 500 கிராம் எடையுள்ள பால் பாக்கெட் 120 கிராம் எடை அளவு குறைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை, சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் அளவு குறைக்கப்பட்டு பால் மற்றும் தயிர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் சென்னையில் ஊதா நிற பால்பாக்கெட் அளவு குறைக்கப்பட்டு விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனம் பாலில் அளவை குறைத்து மோசடி செய்து வருவதை பால் முகவர்கள் கண்டித்து வருகின்றனர்.