காவேரி பகுதியில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. இதனால் தண்ணீர் திறப்பு 1௦௦௦௦ கன அடியாக குறைந்துள்ளது.
தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 152 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 198 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அணைக்கு வரும் நீரின் அளவை விட அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் இன்று காலை முதல்நீர் திறப்பு 10000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.நேற்று 81.32 அடியாக இருந்த நீரின் அளவு இன்று 80.29 அடியாக சரிந்துள்ளது.