ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி

July 6, 2024

ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்றார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகின. முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5% வாக்குகள் பெற்றார். சயீது 38.6% வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். மசூத் அதிக வாக்குகளை பெற்றிருந்தாலும் ஈரான் சட்டப்படி அதிபர் தேர்தலில் […]

ஈரான் அதிபர் தேர்தலில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்றார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகின. முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் 42.5% வாக்குகள் பெற்றார். சயீது 38.6% வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார். மசூத் அதிக வாக்குகளை பெற்றிருந்தாலும் ஈரான் சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50% வாக்குகளை பெறுவது கட்டாயமாகும்.

எனவே முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் மசூத் மற்றும் சயீது இருவருக்கும் நேற்று இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்றார். அவருக்கு மூன்று கோடி வாக்குகளில் 1.7 கோடி வாக்குகள் இருப்பதாகவும் சயீதுக்கு 1.3 கோடி வாக்குகள் கிடைத்ததாகவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu