புதிய நெறிமுறைகள் காரணமாக குளிர்சாதனப் பெட்டிகள் விலை 5% வரை உயரும்

January 3, 2023

ஜனவரி 1ம் தேதி முதல், BEE (Bureau of Energy Efficiency) -ன் புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய நெறிமுறைகளின் படி, குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள ஃப்ரீசர்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு, தனித்தனியாக ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன. எனவே, குளிர்சாதனப் பெட்டிகளின் விலை 5% வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. கோத்ரேஜ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கமல் நந்தி பேசுகையில், "புதிய நெறிமுறைகளுக்கேற்ப வடிவமைக்கப்படுவதால், உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளது. எனவே, விலைகள் 2-3% வரை உயர்த்தப்படலாம். ஒவ்வொரு […]

ஜனவரி 1ம் தேதி முதல், BEE (Bureau of Energy Efficiency) -ன் புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய நெறிமுறைகளின் படி, குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள ஃப்ரீசர்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு, தனித்தனியாக ஸ்டார்கள் வழங்கப்படுகின்றன. எனவே, குளிர்சாதனப் பெட்டிகளின் விலை 5% வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.

கோத்ரேஜ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கமல் நந்தி பேசுகையில், "புதிய நெறிமுறைகளுக்கேற்ப வடிவமைக்கப்படுவதால், உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளது. எனவே, விலைகள் 2-3% வரை உயர்த்தப்படலாம். ஒவ்வொரு மாடலுக்கும் விலை உயர்வு விகிதம் வேறுபடும்" என்று கூறியுள்ளார். ஹையர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சதீஷ், புதிய நெறிமுறைகளால், 2-4% விலை உயர்வை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார். மேலும், பானாசோனிக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக அதிகாரி புமியாசு புஜிமொரி, பானாசோனிக் குளிர்சாதனப் பெட்டிகளின் விலை 5% வரை உயர்த்தப்படலாம் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu