இனிமேல் வக்பு சொத்துக்களுக்கு 'உமீத்' போர்ட்டல் – முழுமையான மேலாண்மைக்கு மத்திய அரசின் புதிய நடவடிக்கை!
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணல்ல என உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள நிலையில், வக்பு சொத்துக்களை வெளிப்படை முறையில் பராமரிக்க ‘உமீத்’ எனும் இணையதளத்தைக் தொடங்க உள்ளது. ஜூன் 6 முதல் செயல்படும் இந்த போர்ட்டல் மூலம், இந்தியா முழுவதிலும் உள்ள வக்பு சொத்துகள் 6 மாதங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். நீளம், அகலம், புவி குறியீடு உள்ளிட்ட விவரங்கள் இந்த இணையதளத்தில் பதிவாகும். காலதாமதம் ஏற்படின் 1–2 மாதங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும். ஆனாலும் அதை மீறும் சொத்துகள் வக்பு தீர்ப்பாயம் முன் விசாரணைக்காக அனுப்பப்படும். இது வக்பு சொத்துகளில் நேர்த்தியான மேலாண்மையை நோக்கி எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கையாகும்.