நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை

December 28, 2022

நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது. சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நடைபெற்றது. கரோனா சிறப்பு வார்டுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் தயார் […]

நாடு முழுவதும் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நடைபெற்றது.

சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் காட்டுத் தீ போல பரவி வருகிறது. அந்த நாட்டில் தற்போது தினசரி பல லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நடைபெற்றது.

கரோனா சிறப்பு வார்டுகள், மருத்துவர்கள், செவிலியர்களின் தயார் நிலை, மருந்துகள், பாதுகாப்பு ஆடைகள், பாதுகாப்பு உபகரணங்களின் கையிருப்பு, அவசர சிகிச்சை மையத்தில் வென்டிலேட்டர்களின் தயார் நிலை, சீரான ஆக்சிஜன் விநியோகம், ஆய்வக வசதி, ஆம்புலன்ஸ் வசதி, தூய்மை பணியாளர்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும் ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu