வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும்படி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தி வருகின்றனர்.
வேளாண் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த முடிவெடுத்திருந்தனர். இதற்காக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டு டெல்லி சென்றனர். அவர்களை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் மத்திய அரசு இடையிலான நான்காம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று நடைபெற்றது. அதில் சோள,ம் சில பருப்புகள், காட்டன்கள் போன்ற பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதனை அரசு ஏஜென்சிகள் கொள்முதல் செய்யும் உள்ளிட்ட பரிந்துரைகள் கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.