தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து திட்டத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 65 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி இன்று முதல் இலவச பேருந்து திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும். இந்த சேவை முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














