ரிலையன்ஸ் டிஸ்னி ஸ்டார் இணைப்பு - முக்கிய அறிவிப்புகள்

December 26, 2023

ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் இணைக்கப்பட உள்ளன. கடந்த வாரம், லண்டனில் கையெழுத்தான பிணைப்பு இல்லா ஒப்பந்தத்தின் படி, வரும் 2024 பிப்ரவரி மாதத்திற்குள் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும். கடந்த ஓராண்டு காலமாக, ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்தை இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, கடந்த வாரம், முகேஷ் அம்பானியின் நெருங்கிய கூட்டாளியான மனோஜ் மோடி மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் கெவின் மேயர் ஆகியோர் […]

ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் இணைக்கப்பட உள்ளன. கடந்த வாரம், லண்டனில் கையெழுத்தான பிணைப்பு இல்லா ஒப்பந்தத்தின் படி, வரும் 2024 பிப்ரவரி மாதத்திற்குள் இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கடந்த ஓராண்டு காலமாக, ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்தை இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக, கடந்த வாரம், முகேஷ் அம்பானியின் நெருங்கிய கூட்டாளியான மனோஜ் மோடி மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் கெவின் மேயர் ஆகியோர் பிணைப்பு இல்லா ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டு உள்ளனர். இந்த ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியாவில், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் காணும் வழக்கத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும். இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51% பங்கும், டிஸ்னிக்கு 49% பங்கும் இருக்கும். இணைக்கப்பட்ட நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை இரு நிறுவனங்களும் சமமாக நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu