ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கடந்த நிதியாண்டில், சுமார் 42,000 பணியாளர்களை நீக்கியுள்ளது. இது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 11% ஆகும். குறிப்பாக, ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் அதிகமான பணி நீக்கங்கள் பதிவானது. கடைகள் விரிவாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், ஊழியர்கள் நீக்கம் அதிகளவில் காணப்பட்டது. இது தவிர, ரிலையன்ஸ் ஜியோ பிரிவிலும் பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் பகுதியாக பணி நீக்கங்கள் நிகழ்ந்தது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த பணி நீக்கம், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல், பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் நடத்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.