ரிலையன்ஸ் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தின் இந்திய பிரிவை கையகப்படுத்தியது. சுமார் 2850 கோடி ரூபாய்க்கு இந்த கையகப்படுத்தல் கடந்த வருட டிசம்பர் மாதம் நடைபெற்றது. கடந்த மே மாதத்தில் முழுமையான கையகப்படுத்தல் நிறைவடைந்தது. இந்த நிலையில், இந்தியாவில் மெட்ரோ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவதற்காக, 254 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தியுள்ளது. இந்தியாவில் மெட்ரோ நிறுவனத்தின் நிலையங்களை அதே பெயரில் ரிலையன்ஸ் இயக்க உள்ளது.
சில்லறை வணிகப்பிரிவில், ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மெட்ரோ நிறுவனத்தின் கையகப்படுத்தல் மிக முக்கிய நகர்வாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், மெட்ரோ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்துவதற்காக மட்டுமே கோடிக்கணக்கான தொகை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.














