ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 10.8% சரிவடைந்து 16011 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் மொத்த இயக்க வருவாய் 231132 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.6% சரிவாகும். மேலும், நிறுவனத்தின் மொத்த எபிட்டா மதிப்பு 38093 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 37997 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய் வர்த்தகம் தொடங்கி, எஃப் எம் சி ஜி வர்த்தகம் வரையில், பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் ஈடுபட்டு வருவதால், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சி ஸ்திரமாக உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டுக்கு, நிறுவனத்தின் பொது பங்கு ஒன்றுக்கு 9 ரூபாய் டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.