ரிலையன்ஸ் 2 ம் காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் உயர்வு

October 30, 2023

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த காலாண்டில் 27% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த செய்தியின் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மிகவும் உயர்வாக காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இது அமைந்தது. இதற்கு, நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஜூலை […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதன்படி, ரிலையன்ஸ் நிறுவனம், கடந்த காலாண்டில் 27% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த செய்தியின் எதிரொலியாக, இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.இன்றைய காலை நேர வர்த்தகத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மிகவும் உயர்வாக காணப்பட்டது. இந்திய பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இது அமைந்தது. இதற்கு, நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17394 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிக பிரிவு, ஃபேஷன் மற்றும் மின்னணு சாதனங்கள் வர்த்தகத்தில் கணிசமான உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu