அடுத்த 3 ஆண்டுகளில், மேற்கு வங்க மாநிலத்தில் 20,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பம், சில்லறை வணிகம் மற்றும் பசுமை எரிசக்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அண்மையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், மேற்கு வங்கத்தில் 45000 கோடி ரூபாய் முதலீடு செய்த ரிலையன்ஸ் நிறுவனம், தொடர்ந்து முதலீடுகளை குவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள புராதனமான காளி காட் கோவிலை புனரமைப்பு செய்ய உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது.