ரிலையன்ஸ் நியூ எனர்ஜி (RNEL), சூரிய தொழில்நுட்ப நிறுவனமான Caelux- ன் 20% பங்குகளை வாங்க 12 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது.
ரிலையன்ஸ் நியூ எனர்ஜி (RNEL) ஆனது அமெரிக்க சூரிய தொழில்நுட்ப நிறுவனமான Caelux கார்ப்பரேஷனின் 20 சதவீத பங்குகளை வாங்க 12 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
குஜராத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒளிமின்னழுத்த ஜிகா தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. அதற்காக சூரிய தொழில்நுட்பத்தில் செயல்படும் Caelux கார்ப்பரேஷனில் முதலீடு செய்கிறது. இதன்மூலம் ரிலையன்ஸ் குறைந்த செலவில் சக்தி வாய்ந்த சோலார் மாட்யூல்களை உற்பத்தி செய்ய முடியும் என தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பெரோவ்ஸ்கைட் அடிப்படையிலான சூரிய தொழில்நுட்பம் கொண்டு Caelux நிறுவனம் செயல்படுகிறது. அதாவது குறைந்த செலவில் சோலார் திட்டத்தின் மூலம் 25 ஆண்டுகளில் 20 சதவிகிதம் கூடுதல் ஆற்றலை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமாகும்.
இது பற்றி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ௯றியதாவது, பசுமை எரிசக்தி உற்பத்தி சூழலை உருவாக்குவதற்காக Caelux நிறுவனத்துடனன் இணைந்துள்ளோம். இந்த இணைவு Caelux- ன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு உதவும். அத்துடன் வணிக வளர்ச்சியை விரைவுபடுத்தும் என ௯றினார். அதைத் தொடர்ந்து Caelux கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் கிரேபீல் கூறுகையில், ரிலையன்ஸ் உடனான இணைவு, குறைந்த விலையில் தரமான சோலார் மாட்யூல்களை உ௫வாக்கும் அவர்களின் முயற்சியை வேகப்படுத்தும் என ௯றினார். மேலும் இந்த ஒப்பந்தத்திற்கானப் பரிவர்த்தனைகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்று RNEL தெரிவித்துள்ளது.