ரிலையன்ஸ் ஜியோ 112 பில்லியன் டாலர் மதிப்பில் ஐபிஓ வெளியிடும் - ஜெஃப்ரீஸ் அறிவிப்பு

July 11, 2024

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் 2025 ஆம் ஆண்டில் ஐ பி ஓ வெளியிடும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 112 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்த ஐபிஓ இருக்கும் என கணித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அண்மையில் சேவை கட்டண உயர்வை அறிவித்தது. இதன் வழியாக குறிப்பிட்ட அளவு நிதி கிடைக்கும் என்றாலும், முக்கிய நிதி திரட்டும் நடவடிக்கையில் அடுத்த ஆண்டு ஈடுபட உள்ளதாக ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது. முதலாவது நிதி திரட்டும் வகை ஐபிஓ. […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் 2025 ஆம் ஆண்டில் ஐ பி ஓ வெளியிடும் என ஜெஃப்ரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 112 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்த ஐபிஓ இருக்கும் என கணித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அண்மையில் சேவை கட்டண உயர்வை அறிவித்தது. இதன் வழியாக குறிப்பிட்ட அளவு நிதி கிடைக்கும் என்றாலும், முக்கிய நிதி திரட்டும் நடவடிக்கையில் அடுத்த ஆண்டு ஈடுபட உள்ளதாக ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது. முதலாவது நிதி திரட்டும் வகை ஐபிஓ. இரண்டாவது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மூலம் நிதி திரட்டுவது. இதில் ஐபிஓ வெளியிடுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக உள்ளதாகவும், இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 7 முதல் 15% உயரக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஜெஃப்ரீஸ் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu