இந்தியாவின் 11 முக்கிய நகரங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
லக்னோ, திருவனந்தபுரம், மைசூர், நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், முகாலி, பஞ்சகுலா, சிரக்பூர், கரார், தேராபசி ஆகிய 11 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஜியோ வரலாற்றில், ஒரே நேரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த நகரங்களுக்கு 5ஜி சேவை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அத்துடன், மேற்குறிப்பிட்ட நகரப் பகுதிகளில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக ஜியோ உள்ளது.
மேற்குறிப்பிட்ட நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு, 1 ஜி பி பி எஸ் வேகத்தில் கூடுதல் கட்டணங்கள் எதுவும் இன்றி 5ஜி இணைய சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜியோ செய்தி தொடர்பாளர், ஒரே நேரத்தில் 11 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை கொண்டுவரப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.